ஃபேஸ்புக், டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக பின்ட்ரெஸ்ட் வளர்ச்சி பெற்றுள்ளது.
'பின்ட்ரெஸ்ட்' செய்திகளில் அடிபடும் வேகத்தைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது.
பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம், பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஒரு விஷயம் உறுதி; பின்ட்ரெஸ்ட் இன்டர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது.
பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.
பின்ட்ரெஸ்ட்டை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட தளங்களும் அதிகரித்திருப்பதோடு, போட்டி தளங்களும் உதயமாக துவங்கியிருக்கின்றன. அது சரி, பின்ட்ரெஸ்ட்ட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது?
பின்ட்ரெஸ்ட்டைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், இணையத்தின் சமீபத்திய போக்கை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளங்கள் இருப்பது போல், வாங்கிய பொருட்களின் தரம் குறித்து பகிர்ந்து கொள்ளவும் இணையதளங்கள் இருக்கின்றன!
இவ்வாறு செய்வதன் நோக்கமும் பயனும் என்னவென்றால் வாங்க நினைக்கும் பொருளின் தரம் மற்றும் சிறப்பம்சங்கள் அல்லது குறைகள் போன்றவற்றை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல மற்றவர்கள் வாங்கிய பொருட்களின் குறை நிறைகளையும் அவர்களின் பகிர்வு மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகை இணையதளங்கள் தான் இப்போ� �ு இணையத்தின் போக்காக இருக்கின்றன. இவை சுய வெளிப்பாடு தளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது இணையவாசிகள் தங்கள் ரசனைகளையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொள்ள வழி செய்யும் தளங்கள்.
வெளிப்படுத்தி கொள்வது என்றால் டிவிட்டர் குறும்பதிவுகள் போலவோ ஃபேஸ்புக் அப்டேட்கள் போலவோ அல்ல!பேஸ்புக்கும், டிவிட்டரும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அந்த கால சினிமா போல. இந்த தளங்களில் எல்லாம் மணிரத்னம் படம் போல வசனங்களுக்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் எதையும் விவரிக்கவே வேண்டாம். வார்த்தைகளே � �ல்லாமல் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளலாம். பின்ட்ரெஸ்ட் இதை தான் செய்கிறது.
அதெப்படி எதையுமே சொல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும் என வியப்பு ஏற்படலாம். இதன் முழு ஆச்சர்யத்தை உணர வேண்டும் என்றால் பின்ட்ரெஸ்ட் இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.
பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
இணையத்தில் பார்ப்பவை என்றால் அழகான புகைப்படங்களில் துவங்கி ஆடை வடிவமைப்பு, பூ வேலைப்பாடு, சமையல் குறிப்பு, இணையதளம், கேக் மாதிரிகள், புத்தகங்கள் என்று என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வீடியோ, செயலிகள் போன்றவற்றையும் பகிர்ந்து.. மன்னிக்கவும்.. குத்தி கொள்ளலாம்.
வெளியே அலைந்து திரிவதைவிட இப்போது இணையத்தில் அலைவது தான் அதிகமாகிவிட்டது. தினமும் பல தளங்களுக்கு செல்கிறோம். தேடியந்திரம் அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் காட்டிய வழியில் பல தளங்களை பார்க்கிறோம். இவற்றில் சிலவற்றை குறித்து வைக்க நினைப்போம். ஆனால் அதன் பிறகு மறந்து விடுவோம். தளங்கள் என்றால் புக்மார்க் செய்து கொள்ளலாம். ஆனால� � அழகான ஆடையின் வடிவமைப்பையோ அல்லது புதிய மேஜை விரிப்பு அலங்காரத்தையோ பார்த்து ரசித்தால் எப்படி அதனை சேமித்து வைப்பது. புகைப்படம் எனில் அப்படியே டெஸ்க்டாப்பில் சேமித்து கொள்ளலாம். ஆனால் அவற்றை வகைப்படுத்துவதோ பின்னர் எடுத்து பார்ப்பதோ கொஞ்சம் கஷ்டம் தான்.
பின்ட்ரெஸ்ட்டில் இந்த தொல்லை எல்லாம் கிடையாது. இணையதளத்தில் ஒரு விஷயம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறதா, அதை உடனே 'பின்' அதாவது குத்தி கொண்டு விடலாம். குத்துவது என்றால் அந்த படம் அழகாக நமக்கான பலகையில் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எளிதாக அடையாளம் காண ும் வகையில் இவற்றுக்கு பொருத்தமான தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி வைக்கலாம்.
உதாரணத்திற்கு, 'ஆடைகள்' என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான ஆடை வடிவமைப்பு படங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்கலாம். 'கல்யாண நகைகள்' என்னும் தலைப்பில் அழகிய வேலைப்பாடு கொண்ட நகைகளின் புகைப்படங்களை சேமித்த� �� வைக்கலாம். இப்படி சேமிப்பது அல்லது குத்துவது மிகவும் சுலபம். பின்ரெஸ்ட்டில் உறுப்பினராகி அதில் உள்ள பிரவுசர் நீட்டிப்பு பட்டையை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தில் கிளிக் செய்தால் போதும். " 'பின்' செய்யவா தலைவா?" என கேட்கும் பட்டன் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் போதும். அந்த காட ்சி சேமிக்கப்பட்டுவிடும்.
பின்னர் தேவைப்படும் போது அந்த படத்தை பார்த்து, எந்த தளத்தில் அதனை கண்டோம் என எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த சேமிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இதே போல மற்ற உறுப்பினர்கள் சேமித்து வைத்துள்ளவற்றை பார்வையிடலாம். அதில் உள்ள விஷயம் பிடித்திருக்கிறது எனில், அதனை 'லைக்' செய்வதோடு நமது பலகையிலும் சேமித்து வைக்கலாம். ரீடிவீட் போல இது ரீபின். டிவிட்டர் ப� �ல எந்த உறுப்பினரையும் பின் தொடரலாம். அவர்கள் சேமிப்பதை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாது இன்னும் ஏகப்பட்ட சமூக வலைப்பின்னல் பாணி வசதிகள் உள்ளன.
இந்த தளத்தில் நுழைந்தால் அதன் முகப்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களின் வகைகளையும் அவற்றின் பரந்துவிரிந்த தன்மையையும் பார்த்து ரசிக்கலாம். கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கும். அந்த அளவுக்கு பகிர்வுகள் பலவகையில் இருக்கும்.
இந்த அறிவிப்பு பலகை வசதியை பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஃபேஷன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த வடிவமைப்புகளுக்கான டைரியாக பயன்படுத்தலாம். புதிய ஃபேஷன் போக்குகளை தெரிந்து கொள்ளவும் இது கைகொடுக்கும்.
திருமணம் போன்ற வைபவங்களுக்கு ஆடை வாங்கும் போது நாம் பார்த்த டிசைன்களை இங்கே குறிப்பிட்டும் உறவினர்கள் நண்பர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம். அவர்கள் பரிந்துரைக்க விரும்புவதை 'பின்' செய்வதன் மூலமோ சுட்டிக்காட்டலாம். கருத்துக்கள் வழியே யோசனை கூறலாம்.
வீட்டிற்கான உள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தால் நாம் தேர்வு செய்த மாதிரிகளை இங்கே பகிர்ந்து கொண்டு அவை பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.
மனதுக்கு ஊக்கம் அளிக்க கூடிய விஷயங்களை, சமையல் குறிப்புகளை, வீடியோ காட்சிகளை என எவற்றை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
அமெரிக்க பெண்மணி இந்த தளத்தில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மூலமாக அவரது கணவர் இப்பெண்மணியின் ரசனை பற்றி அதிகம் தெரிந்து கொண்டு அவர் தன் பங்கிற்கு சிலவற்றை பரிந்துரை செய்து வியப்பளித்துள்ளார். இதனால் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி 'என் கணவருக்கு பிடித்தவை' என்னும் தலைப்பில் � �ரு பலகையை உருவாக்கி அவருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இப்படி பல அற்புதங்களும் சாத்தியமாகலாம்.
ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் போரடித்திருந்தால் 'பின்ட்ரெஸ்ட்டை' பயன்படுத்தி பாருங்கள். அதன் பின், உங்கள் மனம் பின்ட்ரெஸ்ட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்!
Post a Comment