நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார்.
ரஸ்னா விளம்பரம் உள்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ்(14). அமிதாப் பச்சன் நடித்த 'பா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும் பிரியாமணியுடன் வெள்ளிநட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில் நடி� ��்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடிவினா நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தளமான ஜோம்சோமுக்கு சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 16 இந்தியர்கள் உள்பட 21 பேர் இருந்தனர்.
நேற்று காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள். இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது தாயும் பலியாகினர்.
இந்த விபத்தில் விமானம் நொருங்கிப் போனது ஆனால் தீப்பிடிக்கவில்லை. விமானிகள் பிரபு ஷரண் பதக் மற்றும் ஜே.டி. மகாராஜன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் முகங்கள் படுமோசமாக சேதமைடந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Post a Comment