ஐபிஎல் போட்டியின்போது தான் நோ பால் போட பணம் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொய் என்றும், தான் குற்றமற்றவன் என்றும் கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் ஐபிஎல் போட்டி ஒன்றில் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ஒரு தொலைக்காட்சி சேனல் ஒ� ��ிபரப்பியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஸ்பாட் பிக்சிங் பற்றி என்ன கூறினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அந்த தொலைக்காட்சி சேனல் நான் ஸ்பாட் பிக்சிங் செய்தேன் என்று கூறும் காட்சிகளை ஒளிபரப்புகிறதே. நான் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்ட காட்சியையும் ஒளிபரப்ப வேண்டியது தானே. டெலிபோன் பேச்சில் வரும் � �ுரல் என்னுடையது அல்ல. போலியாக யாரோ பேசி வேறொருவரை மாட்டிவிடுவது சுலபம்.
இந்த விவகாரம் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறி என்னை சந்தித்தனர். எனக்கு நல்ல வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியதால் நான் அவர்களை 7 முதல் 8 தடவை சந்தித்துள்ளேன். அவ ர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் 50 வீரர்களை சந்தித்தனர். குறைந்தது 15 கிரிக்கெட் வீரர்களிடமாவது நான் அவர்களைப் பற்றி பேசியுள்ளேன்.
ஆனால் அனைவருக்குமே அவர்கள் மீது சந்தேகம் இருந்தது. காரணம் அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் பிக்சிங் மற்றும் அணி உரிமையாளர்கள் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்பதைப் பற்றியே கேட்டுள்ளனர். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறிக்கொண்டு சர்ச்சைக்கு� �ிய விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசினார்கள்.
அந்த தொலைக்காட்சி சேனல் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார்.
டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடும் டிபி சுதீந்திரா உள்ளூர் போட்டியில் லஞ்சம் வாங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் ஐபிஎல் போட்டியின்போது லஞ்சம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்தூர் டி20 லீக் மேட்சில் நோ பால் போட அவர் ரூ.40,000 கேட்டது கேமராவில� � பதிவாகியுள்ளது.
இந்த பிரச்சனைகளை அடுத்து ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று அவசரமாகக் கூடுகிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்படும் வீடியோவை விசாரணைக்கு கேட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் சிலர் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுவதாக சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன. ஊழல் மற்றும் முறைகேடுகளை பிசிசிஐ ஒரு நாளும் சகித்துக்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்துள்ள அந்த வீடியோக்கள் பரிசோதிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Post a Comment