தனது தாய்லாந்து டூர் முடித்துக்கொண்டு வீடு திரும்பிய த்ரிஷா, அடுத்ததாக வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள தயாரானார். சமர், பூலோகம் என தமிழிலும் தெலுங்கிலும் இந்த வருடம் முழுவதும் பிஸி ஷெடியூலுடன் இருந்தார் த்ரிஷா. ஆனால் எதிர்பாராத விதமாக மறுபடியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் த்ரிஷாவின் நண்பர்கள் அவர் நல்லபடியாக குணமாகி திரும்பவேண்டும் என வேண்டிக்கொண்டிருக்க்கும் சமயத்தில் த்ரிஷா ஆச்சர்யப்படும் அளவிற்கு த்ரிஷா வீட்டிற்கு வந்து சேர்ந்தது சச்சின் கையெசுத்து போட்ட பேட்.
த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்தாகவும், த்ரிஷாவின் மனதிற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் த்ரிஷாவின் ரசிகர்கள் அளித்துள்ள பரிசு தான் சச்சின் கையெழுத்து போட்ட அந்த அவி� �ா பேட்.
இந்த பரிசை கண்டு மகிழ்ந்த த்ரிஷா அந்த பேட்டைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரிவதில்லையாம். அந்த பேட்டை வித விதமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டு வீட்டிலேயே அடைந்துகிடக்கிறாராம் த்ரிஷா.
Post a Comment