கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் வசந்த் தொடங்கியுள்ள புதிய படம் மூன்றுபேர் மூன்று காதல்!
இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகிய மூவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக � �ானு நடிக்கிறார்.
இவருடன் ஸ்ருதி, சுர்வீனின் ஆகிய இரண்டு மும்பை மாடல்கள் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பே சத்தமின்றி இந்தப் படத்தை ஆரம்பித்துவிட்ட வசந்த், இப்போது முக்கால்வாசி படத்தை முடித்துவிட்டாராம்.
மூன்று ஜோடிகளின் காதல் கதைதான் படம் என்றாலும் மூன்றையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் வசந்த்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் விசேஷம், தேசிய விருது பெற்ற நான்கு கலைஞர்கள் ஒன்றிணைவதுதான். வசந்த், சேரன், தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர்தான் அந்த நான்கு விருது பெற்ற கலைஞர்கள்.
home
Home
Post a Comment