நேற்று இரவு சத்தீஸ்கர் மாநிலம் த ண்டேவாடா மாவட்டத்தில் நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் ஆறு தேசிய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு கிரந்துல் பகுதியில் அமைந்துள்ள தேசிய கனிம மேம்பாட்டு கழக பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 9.30 மணியளவில் ஆயுதங்களுடன் நக்சல்கள் பாது� �ாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் ஆறு பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு வாகன ஓட்டியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினரிடமிருந்து நக்சலைட்டுகள் ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் ப� �துகாப்பு படை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி ராம் நிவாஸ் தெரிவித்தார்.
கிரந்துல் - மற்றும் பச்சேளி கனிம சுரங்க பகுதியில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment