யோகா குரு பாபா ராம்தேவ் புதுடெல்லியில் அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
தலித் வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 341-ல் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதர ிக்கிறேன்.
இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் 341-வது பிரிவின் கீழ் தலித் கிறிஸ்தவர்களும், தலித் முஸ்லிம்களும் வரவில்லை என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். இது நியாயமற்றது.
ஒரு தலித் எந்த மதத்தை சேர்ந்தவராயிருந்தாலும் தலித்துதான், எனவே அனைத்து தலித்துகளும் சம உரிமை பெறவேண்டும். இதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும். என்னுடைய ஆசிரமத்தில் 3 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மேல் உள்ளனர். அங்கு மதப் பாகுபாடுகள் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒன்றுதான்.
வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரக்கோரி ஜூன் 3-ந்தேதியிலும், ஆகஸ்டடு மாதத்திலும் போராட்டம் நடத்தவுள்ளேன். சாதாரண மனிதனைப் பற்றி எந்தக் கட்சிக்கு ம் அக்கறை இல்லை. அரசியல்வாதிகள் ஊழலின் மூலம் நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்
இவ்வாறு ராம்தேவ் பேசினார்.
home
Home
Post a Comment