ஆப்கானிஸ்தான் அமைதிக் குழுவின் மூத்த தலைவராகவும், அதிபர் ஹமீத் கர்சாயின் நெருங்கிய ஆலோசகராகவும் விளங்கி வந்தவர் அர்சலா ரஹ்மானி. இன்று காலை வீட்டிலிருந்து அர்சலா வெளியே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் யாரோ அவரை நோக்கி துப்பாகியால் சுட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். ரஹ்மானியின் இடது கையில் தாக்கிய குண்டு, கை வழியாக பாய்ந்து இதயத்தைத் துளைத்ததாக அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை நடைபெற்ற தலிபான் ஆட்சியில், ரஹ்மானி உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் கர்ச ாயின் கட்சியில் சேர்ந்த ரஹ்மானி, தற்போதைய அரசில் அங்கம் வகித்து வந்தார்.
சமீபத்தில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரஹ்மானி விரிவுபடுத்தினார். இந்நிலையில் ரஹ்மானி கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்கா ஆதரவுடன் ஆப்கனில் கர்சாய் மேற்கொண்டுள்ள சமாதான நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆப்கன் அமைதிக்குழுவின் தலைவரும், முன்னாள் அதிபருமான புர்கானுதீன் ரப்பானி, க� �ந்த செப்டம்பர் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment