சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பிறகு திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா (76) இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது அவ� ��் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இருந்தும், தன்னை கொல்ல சீனா சதி செய்வதாக தனது அச்சத்தை தெரிவித்துள்ளார்.
திபெத் பெண்கள் சிலரை சீனா தனது ஏஜெண்டுகளாக நியமித்து பயிற்சி அளித்து வருகிறது. தலைமுடி மற்றும் தலையில் அணியும் ஸ்கார்ப் ஆகியவற்றில் விஷத்தை தடவி அவர்களை தன்னிடம் ஆசி பெற அனுப்ப திட்டமிட்டுள்ளது. அவர்களின் தலையை தொட்டு நான் ஆசி வழங்கும்போது எனது கைகளில் அ� ��்த விஷம் ஒட்டிக் கொள்ளும் அதன் மூலம் உடலுக்குள் விஷம் பரவி என்னை கொல்ல சதி செய்துள்ளனர்.
இதற்கு சீன அரசுடன் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் உடந்தையாக உள்ளனர். இது குறித்த ரகசிய தகவல் திபெத்தில் இருந்து எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் எனது பாதுகாவலர்களுக்கு இந்த தகவல் சரிவர கிடைக்கவில்லை. எனவே, எனக்கு மேலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment