ஓய்வுக்குப் பின்னர் ரா� �ுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் எங்கள் குழுவில் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராட விரும்பினால் அவரை வரவேற்று மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்வோம். ஏனெனில் ஒத்த மனதுடையவர்கள்தான் நமது குழுவுக்கு தேவை. எனவே தான் அவர் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடும்படி நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்' என ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க தலைவ� �் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மேலும், 'நான் ராணுவத்தில் பணியாற்றியபோது பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான போர்களில் பங்கு கொண்டேன். தற்போது நமக்குள் இருக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டும்' எனவும் அன்னா கேட்டுக்கொண்டார்.
தங்கள் இயக்கத்தில் சேரும்படி வி.கே.சிங்குக்கு, அன்னா மறைமுக அழைப்ப� �� விடுத்துள்ளது பற்றி, அன்னா குழு உறுப்பினர்களில் ஒருவரான கிரண்பெடி கூறுகையில், 'முன்னாள் ராணுவத்தினர் எங்கள் இயக்கத்தில் சேரும்போது, இயக்கம் மேலும் வலுப்பெறும்' என்றார்.
இம்மாதம் 31-ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங், ஓய்வுபெற்ற பின்னர் அன்னா ஹசாரே குழுவில் இணைவது பற்றி முடிவெடுப்பார் எனத� �� தெரிகிறது.
Post a Comment