News Update :
Home » » ஜனாதிபதி தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்த தி.மு.க. சிபாரிசு: காங்கிரஸ் கட்சி ஏற்குமா?

ஜனாதிபதி தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்த தி.மு.க. சிபாரிசு: காங்கிரஸ் கட்சி ஏற்குமா?

Penulis : karthik on Tuesday, 1 May 2012 | 00:39




ஜனாதிபதி பிரதீபா பாட்ட� �லின் பதவிக்காலம் ஜூலை 25-ந்தேதி முடிவடைவதால், ஜூலை முதல் வாரத்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சபாநாயகர் மீராகுமார், கரன்சிங் மற்றும் சோனியாவின் குடும்ப நண்பர் ஒருவரது பெயரும் காங்கிரசாரிடம் ப� ��ிசீலினையில் உள்ளது.  
காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஏற்கமாட்டோம் என்று பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமாஜ்வாடி, அ.தி. மு.க., தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள ் களம் இறக்க திட்டமிட்டுள்ள அப்துல் கலாமை ஆதரிக்கத் தயார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டுமே தன்னிச்சையாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாது என்பதால், மாநில கட்சிகளின் முடிவையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக திரிணாமுல் காங்க� ��ரஸ் உள்பட பல மாநில கட்சிகள் கூறி இருப்பதால், இப்போதைக்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு யூகத்தின் அடிப்படையில் பேசப்பட்டு வருகிறது.  
பா.ஜ.க. மற்றும் சில மாநில கட்சிகளின் மனதில் அப்துல்கலாமே உள்ளார். இதில் ஒருமித்த கருத்து ஏற்படாதபட்சத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பாதலை பா.ஜ.கவும், மாநில கட்சிகளும் சிபாரிசு செய்யலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள� ��ளது.
எனவே மாநில கட்சிகள், அந்த கட்சிகளை ஆதரிக்கும் பா.ஜ.க. விஷயத்தில் அதிக குழப்பம் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை நிறுத்தினால் இடது சாரி கட்சிகளின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைக்கும். ஆனால் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒத்துழைக்க மாட்டார். அவரை சமாளிக்க பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு களம் இறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜியை இடது சாரிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம்.
எனவே காங்கிரஸ் தலைவர்கள் இரு தலைகொள்ளி எறும்பாக தவிக்கிறார்கள்.   இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக தி.மு.க. தலை வர் கருணாநிதியை மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி பெயரை தி.மு.க. சிபாரிசு செய்தது. சோம்நாத் சட்டர்ஜி எல்லா கட்சி தலைவர்களுடனும் சுமூகமாக பழகுபவர். மூத்த தலைவர் என்பதோடு நன்கு அனுபவம் பெற்றவர் என்ற பலமும் அவரிடம் உள்ளது. எல்ல� �வற்றுக்கும் மேலாக அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மம்தா பானர்ஜி அவரை மண்ணின் மைந்தர் என்று ஆதரிக்க வாய்ப்புள்ளது.
எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரி கட்சிகளையும் ஒரே பாதையில் கொண்டுவர சோம்நாத் சட்டர்ஜிதான் சரியான நபராக இருப்பார் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதற்கிடையே சோம்நா� �் சட்டர்ஜிக்கு இடதுசாரி கட்சிகளிடம் ஒருமித்த ஆதரவு கிடைக்குமா? என்று தெரியவில்லை. மேலும் சோம்நாத் சட்டர்ஜியை விரும்பாத மற்ற மாநில கட்சிகள் பா.ஜ.க.வுடன் ஓரணியில் திரள வாய்ப்புள்ளது. இத்தகைய காரணங்களால் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பார்களா? என்பதில் இழுபறி நீடிக்கிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger