மெளனகுரு' � �டத்தினை அடுத்து அருள்நிதி யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்தன.
'மெளனகுரு' படத்தினை தயாரித்த அருள்நிதியின் தந்தையான மு.க.தமிழரசு தயாரிப்பில் 'அசோகமித்ரன்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அருள்நிதி. கரு.பழனியப்பன் இயக்க, தமன் இசையமைக்கிறார் என்று விளம்பரம் செய்தார்கள்.
'அசோகமித்ரன்' படம் தற்போது கைவிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது " கரு.பழனியப்பன் மற்றும் அருள்நிதி இருவருக்கும் ஆரம்பித்தில் இருந்த� � சில விஷயங்கள் சரிவர அமையவில்லை.
அதுமட்டுமல்லாது படத்தின் இயக்குனர் தயாரிப்பாளரிடம் படம் குறித்த தகவல் எதுவும் கூற மறுத்துவிட்டார் இயக்குனர். ஆகையால் தான் படம் கைவிடப்பட்டது " என்று தெரிவித்தார்கள்.
இந்தப் படம் கைவிடப்பட்டாலும் தான் இப்போது நடித்து வரும் படம் குறித்து மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் அருள்நிதி.
தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு 'பகல் கொள்ளை' என்று தலைப்பிட� ��டு இருக்கிறார்கள். இப்படத்தினை கணேஷ் விநாயக் என்ற புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.
'கொசுறு' கபாலி : " கரு.பழனியப்பன் தனக்கு கொடுத்த 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டாராம் "
Post a Comment