புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன் கடந்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இ� �ைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை உடன் இதர 4 மாநிலங்களில் 27 சட்டமன� ��ற தொகுதிகளுக்கும் ஜுன் 12-ல் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் மட்டும் 18 சட்டமன்ற மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தொகுதிகளில் நடத்தை விதி உடனடியாக அமுலுக்கு வந்தது.
Post a Comment