புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன். கடந ்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.
அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது
இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி விரைவில் நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர், புதுக்கோட்டை நகரமன்ற தலைவர்) நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. தற்போது அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து இருப்பதன் மூலம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி ஓட்டு விவரம்:-
முத்துக்குமரன் (இந்திய கம்யூ) 65,466
பெரியண்ணன் அரசு (தி.மு.க.) 62,365
சீனிவாசன் (ஐ.ஜே.கே) 4,098
Post a Comment