அஜீத், ஷாலினி தம்பதி � ��ென்னையில் இன்று தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். அஜீத் 12 வருடங்களுக்கு முன் 2000 ஏப்ரல் 24-ந் தேதி ஷாலினியை மணந்தார். அப்போது அஜித் கதாநாயகனாக நடித்து வந்தார்.
ஷாலினியும் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார். இருவரும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக ஓடுகின்றன. பில்லா, மங்காத்தா ஹிட் படங்கள் வரிசையில் அடு த்து பில்லா-2 வர இருக்கிறது. இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.
Post a Comment