இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார், அட்டகாச சாதனைகளின் நாயகன், தொய்வின்றி கிரிக்கெட் சேவை புரிந்து வரும் கிரிக்கெட் கடவுள், சச்சின் டெண்டுல்கர் தனது 39வது பிறந்த நாளை இன்று சிம்பிளாக கொண்டாடினார்.
கிரிக்கெட் உலகின் பெரும்பாலான சாதனைகள் சச்சின் பாக்கெட்டில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. என்ன சாதனை இல்லை இவர் பேட்டில் என்று பாட்டுப் பாடும் அளவுக்கு சாதனைகளை படைத்துப் படைத்துக் குவித்துக் கொண்டிருக்கிறார் சச்சின்.
வயதாகி விட்டது ஒதுங்குவது நல்லது என்று எத்தனையோ பேர் கூறியும் கூட அதைப் பொருட்படுத்தாமல் இவரது பேட் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறது- சாதனைகள் மூலம். சமீபத்தில் கூட அவர் ஒர அருமையான சதத்தைப் போட்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 100 சதங்களைப் போ� ��்டு சாதனை படைத்தார் - அதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார் என்பது வேறு விஷயம்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளே என்று வணங்கப்படும் சச்சின் இன்று தனது 39வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். ஐபிஎல் போட்டிக்காக சண்டிகர் வந்துள்ள சச்சின் அங்கு இன்று தனது மனைவியுடன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் திணேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, கீரன் போலார்ட், பிராங்க்ளின் ஆகியோர் உடன் இரு ந்தனர்.
23 வருடமாக கிரிக்கெட் ஆடி வரும் சச்சினுக்கு அடுத்த ஆண்டு 40 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
188 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,470 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். இதில் 51 சதம், 65 அரை சதம் அடக்கம். அதேபோல 463 ஒரு நாள் போட்டிகளில் ஆஐடி 18,429 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 40 சதம் மற்ற� ��ம் 96 அரை சதம் அடக்கம்.
இன்னும் என்னென்ன சாதனைகளையெல்லாம் சச்சின் படைக்கப் போகிறாரோ தெரியவில்லை. அவர் என்ன செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் ரெடி...
Post a Comment