சில வருடங்களுக்கு முன்பு கோவில் திருவிழா காலங்களில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், புராண நடகம் என்று பொழுதுபோக்குடன் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. சமீபகாலமாக அறிவியல் முன்னேற்றம், நவநாகரீகம் என்ற போலியான முகமூடி அணிந்து நமது இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்லும் அம்சங்கள் பெருகி வருகின்றன.
குறிப்பாக செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் பெரும்பாலானோர் வலைத்தளங்களில் உலாவரும் ஆபாச படங்களுக்கும், மனதை திசைத்திருப்பும் குருந்தகவல்களுக்கும் பலியாகி வருவது வருந்தத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாவட்ட கலெக்டரால் தடை செய்திருந்த அழகளிகளின் குத்தாட்டம் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி இருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழாக் காலங்களில் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி அதிர வைக்கும் ஒளி, ஒலி அமைப்புடன் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தலைநகர் சென்னையிலிருந்தும் வர வழைக்கப்பட்ட நடன அழகிகளுடன் உள்ளூர் மற்றும் நடன குழுவை சேர்ந்த இளைஞர்கள் ஆடத் தொடங்குவார்கள் முதலில் பக்தி பரவசத்துடன் தொடங்கும் நடன நிகழ்ச்சி நேரம் செல்லச் செல்ல இளைஞர்களை சூடேற்றும் வகையில் இருக்கும்
நடு இரவு நேரத்தில் அதற்காகவே தனித்துவமாக தேர்வு செய்யப்பட்ட முக்கல் முனகல் பாடல்கள் இசைக்கத்தொடங்கும். பின்னர் மேடையில் அரை குறை ஆடையுடன் "தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா" என்றும்" மே மாதம் 98-ல் மேஜரானே" என்று அங்கங்களை குலுக்கி நடனமாடும் அழகிகளின் குத்தாட்டம் களைகட்டும்.
இதன் உச்சக்கட்டமாக "நிலா காயுது" என்ற பாடலுக்கு அழகிகள் மேடையிலேயே அங்கங்கள் தெரிய சோப்பு போட்டு குளிப்பதுதான் நிகழ்ச்சியின் `ஹைலைட்'. இதை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் கூட்டம் ஆரவாரத்தில் கைத் தட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள்.
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது பிரபலமாக நடைபெறும் இந்த குத்தாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுப்புற பகுதி கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஏராளமாக திரளுகிறார்கள். இது போன்ற பல நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதலும், கைகலப்பும் ஏற்பட்டு காவல் நிலையம் சென்ற சம்பவங்கள் ஏராளம்.
வெளிமாநில அழகிகளுடன் ஒரு பாடல்களுக்கு சேர்ந்து நடனம் ஆட உள்ளூர் இளைஞர்களிடம் குறிப்பிட்ட தொகை வாங்கப்படுவதாகவும் இவ்வாறு நடன நிகழ்ச்சி என்ற போர்வையில் அடையாளம் தெரியாத பல ஆண்கள் உள்ளூரில் வலம் வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு சவால் விடும் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமைந்து உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளை தடை செய்வது தங்கள் வாழ் வாதாரத்தை பாதிக்கிறது என்று கூறினாலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், கலாச்சார சீரழிவையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதை சீர்செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Post a Comment