அது என்னவோ தெரியவில்லை நயன்தாரா என்றாலே நோ, நாட் பாஸிபிள், அப்படி ஒண்ணும் இல்லையே, பிறகு பார்ப்போம், பிளாஸ்டிக் சர்ஜரி என்று நெகடிவாகவே வருகிறது. ஸாரி… இதுவும் அப்படியொரு எதிர்மறை செய்திதான்.
பில்லா படம் எல்லா வகையிலும் நயன்தாராவுக்கு திருப்புமுனை தந்த படம். அந்தப் படத்திற்குப் பிறகுதான் அகராதியில் கிளாமர் என்பதை நயன்தாரா என்று மாற்றி எழுதினார்கள். டூ பீஸ் என்பதும் நயன் அதனை போட்டு வந்த பிறகே பிரபலமானது (ஹி..ஹி… கொஞ்சம் ஓவர்தான்).
பில்லா 2 படத்தை இப்போது எடுத்து வருகிறார்கள். நயன்தாராவும் இதில் ஒரு சின்ன வேடத்தில் தோன்றுகிறார் என யாரோ புண்ணியவான் கொளுத்திப் போட்டிருக்கிறார். அஜீத் படம், நயன்தாரா நடிக்கிறார்… மொட்டை வெயிலில் பாஸ்பரஸாக பற்றிக் கொண்டது விஷயம்.
ஆனால் நயன்தாராவின் ராசிப்படி இந்த செய்தியை நயன்தாரா தரப்பு மறுத்திருக்கிறது. பில்லா 2-வில் நடிக்க நயன்தாராவை கேட்கவேயில்லையாம்.
பந்தி கடைசியில் பாயாசம் மாதிரி ஒரு பாஸிடிவ் செய்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படம் விரைவில் நடிக்கவுள்ளார் நயன்தாரா.
Post a Comment