2 மைனர் பெண்கள் உள்பட 5 பெண்கள், கடந்த 3 நாட்களில், டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, டில்லி போலீசார் தெரிவித்துள்ளதாவது, டில்லியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 மைனர் பெண்கள் (அதில் ஒருவர் 1ம் வகுப்பு படித்து வரும் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது), கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்வங்கள் தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும், இதுகுறித்த விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய மகிளிர் ஆணைய கருத்தரங்கில் பேசிய அந்த ஆணையத்தின் தலைவி மமதா சர்மா, ஒரு பெண்ணை செக்ஸியாக இருக்கிறார் என்று மற்றவர்கள் வர்ணிப்பது தவறு இல்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சில இளைஞர்கள் பெண்களை பார்த்து செக்ஸியாக இருக்கிறாய் என்று சொல்கின்றனர். இதில் எதுவும் தவறு இல்லையே, இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொள்ள கூடாது. அழகானது, கவர்ச்சியானது என்றுதானே அர்த்தம், ஆனால் நாம் இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொண்டால் தேவையற்ற பிரச்னைகள் வரும். பாசிட்டிவாக எடுத்து கொண்டால் இதனை தவிர்ப்பது முடியும். செக்ஸி என்பது கொச்சையான வார்த்தை அல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா, அதே இவ்வாறு கூறியுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள கற்பழிப்பு சம்பவங்கள் அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Post a Comment