புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பேராதரவுடன் ஜெனீவாவை நோக்கி இன்று 24ஆவது நாளாகவும் நீதிக்கான நடை பயணம் நகர்கின்றது.இன்று Neuchetel மாநிலம் வரை 32 கிலோமீற்றர் தூரம் நடை பயணம் தொடர்ந்தது. இவர்களது வருகையை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் எழுச்சியுடன் எதிர்பார்த்து வரவேற்கின்றனர்.
இன்று சுவிஸ் நாட்டின் பிரதான தொலைக்காட்சிகளில் ஒன்றான Canalalpha இவர்களை சந்தித்து நடை பயணத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததுடன் இவர்கள் கைகளில் ஏந்தி வந்த தேசியக்கொடி பற்றி அதனுடைய தார்ப்பரியம் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
இதுபற்றி நடை பயணத்தை தொடர்கின்ற பரமேஸ்வரன் அதற்கான விளக்கத்தினை தெளிவாக எடுத்துக் கூறும் போது, பிரித்தானிய நாட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது இது தமிழ் மக்களை ஒருங்கிணைங்கின்ற தமிழ் தேசிய இனத்தின் அடையாளக்கொடி என்றும் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஒரு கொலை செய்தவனுக்கு சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை என்றால் ஆயிரம் ஆயிரமாய் தமிழர்களை கொன்றொழித்து தமிழர் தாயகத்தை சுடுகாடாக்கிய சிங்கள அரசுக்கு சர்வதேசமே நீ என்ன தண்டனை வழங்கப்போகின்றாய்.
மார்ச் 5ம் திகதி ஐ.நா முன்றலில் உலகத் தமிழினமே குழுமி நின்று கேள்வியெழுப்புவோம் திரண்டுவாருங்கள்.
Post a Comment