குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெண் கரடி குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெண் கரடி
ஊட்டி, அக். 1-
நீலகிரி மாவட்டத்தில் விளங்குகள்-மனிதர்கள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டங்களுக்குள் புகும் காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகளை நாசப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் காட்டு யானை, கரடி, சிறுத்தைப்புலிகளால் மனித உயிர்களும் பலிவாங்கப்படுகிறது. வன விலங்குகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி குடியிருப்பு பகுதிக்குள் பெண் கரடி ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் உள்ள கொய்யா, ஆரஞ்சு, சீத்தா பழங்களை சுவைத்த அந்த கரடி அங்கேயே படுத்து கொண்டது. உடல் நலக்குறைவு காரணமாக அந்த கரடியால் அங்கிருந்து எழுந்து செல்ல முடியவில்லை. அதிகாலையில் கண்விழித்து வெளியே வந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கரடி படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பகுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஊருக்குள் கரடி படுத்திருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டாக்டர் மனோகரன் தலைமையில் விரைந்து வந்து அந்த கரடியை சோதனை செய்தனர். அப்போது அந்த கரடிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதும் அதன் காரணமாகவே அது நடக்கமுடியாமல் படுத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கரடியை சிம்ஸ் பார்க் அருகே உள்ள வனத்துறை விடுதிக்கு கொண்டு சென்றனர். அஙà ��கு குளுக்கோஸ் ஏற்றபட்டு பால் மற்றும் சத்தான உணவு வழங்கப்பட்டது.
உடல் நலம் தேறிய பின்னர் அந்த கரடி பாதுகாப்பான பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Post a Comment