ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேட்டோ படை முகாமுக்குள் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேட்டோ படை முகாமுக்குள் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
காபூல், அக்.1-
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை குவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு முகாம்களில் இவர்கள் தங்கியிருந்து ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகாமுக்குள்ளேயே நேட்டோவுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிறார்கள். இதில் இதுவரை 52 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
இதனால் நேட்டோ படையினர் 2 வாரமாக தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைத்தனர். ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு அளித்த பயிற்சியையும் நிறுத்தினர்.
நேற்று முன்தினம் மீண்டும் முகாம் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் இருக்கும் முகாமில் ஆப்கானிஸ்தான் வீரர் திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் நேட்டோ வீரர் ஒருவரும், காண்டிராக்டர் ஒருவரும் உயிர் இழந்தார்கள். இது நேட்டோ தளபதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Post a Comment