News Update :
Home » » 2 வது வெற்றி யாருக்கு?: இந்தியா இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

2 வது வெற்றி யாருக்கு?: இந்தியா இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

Penulis : karthik on Friday 21 September 2012 | 23:47

கொழும்பு, செப். 22-
20 ஓவர்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் கடந்த 18-ந்தேதி
தொடங்கியது. நேற்றுடன்6 லீக் ஆட்டம் முடிந்துவிட்டது. இந்தப்போட்டியில்
பங்கேற்றுள்ள 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில்
உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொருபிரிவிலும் முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை இந்தியா,
இங்கிலாந்து ("ஏ"பிரிவு), இலங்கை, தென்ஆப்பிரிக்கா ("சி" பிரிவு) ஆகிய 4
அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் "சி" பிரிவில்உள்ள இலங்கை- தென்ஆப்பிரிக்கா, "பி"
பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 2007-ம்
ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
2-வது "லீக்" ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நாளை
(23-ந்தேதி) சந்திக்கிறது.
கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
தொடங்குகிறது. இரு அணிகளுமே "சூப்பர் 8" சுற்றுக்கு நுழைந்து விட்டதால்
இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்திய அணி
வெற்றி பெற்றாலும் "ஏ" பிரிவில் 2-வது இடத்தில் தான் இருக்கும்.
ஏனென்றால் இங்கிலாந்து அணி தரவரிசைப்படி அந்த பிரிவில் முதல் இடத்தில்
உள்ளது. இந்திய அணி பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடியே
வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எளிதில் நசுக்கி தள்ளியது.
இதனால் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவது எனபது சவாலானது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷேவாக், காம்பீர் ஆகியோர் சிறப்பான
தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதனால் இந்த இருவரும் அதிரடியாக ஆட வேண்டிய
நெருக்கடியில் உள்ளன.
வீராட் கோலி, ரெய்னா, யுவராஜ்சிங்ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில்
உள்ளனர். அவர்கள் இதே அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டும். நமது பந்துவீச்சில்
பலவீனம் உள்ளது. இதை சரி செய்வது அவசியம். முன்னணி வேகப்பந்து வீரரான
ஜாகீர்கானின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏமாற்றம் அளிப்பதாக
இருந்தது. இதனால் அவர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இங்கிலாந்து அணி பேட்டிங் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. லுகேரைட்
ஹால்ஸ், பட்லா, பேர்ஸ்டோவ், கீவ்ஸ் வெட்டர், மார்கன் போன்ற சிறந்த
பேட்ஸ்மேன்களும், கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், சுவான், பிரேஸ்னென் போன்ற
சிறந்த பவுலர்களும் உள்ளனர். உலக கோப்பைபோட்டியிலும் இரு அணிகளும் 2முறை
மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. "சூப்பர் 8"
சுற்றில் சிறப்பாக விளையாட இந்த ஆட்டத்தை இந்திய அணி சரியாக
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னதாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "டி" பிரிவில்
உள்ள பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி
தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை எளிதில் தோற்கடித்தது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger