கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது

சென்னை, செப். 21-
கோயம்பேட்டில் வியாபாரிகள் நடத்திய கடையடைப்பு காரணமாக நேற்று மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை லாரிகளில் இருந்து முழுமையாக இறக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா, மகா ராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நேற்று கோயம்பேடுக்கு 100 லாரிகளில் வெங்காயம் வந்திருந்தது. இதில் 50 லாரிகளில் இருந்த வெங்காயத்தை இறக்கி வைக்க முடியாமல் இன்று அதிகாலையில் தான் இறக்கி வைத்தனர்.
ஆனால் அதற்குள் 50 லாரி வெங்காயம் அழுகி விட்டது. இதனால் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை இன்று கிலோ 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போல் தக்காளி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைந்துள்ளது. கேரட் கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது. பீட்ரூட் கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.6 ஆகவும், பீன்ஸ் ரூ.25-ல் இருந்து ரூ.20 அகவும் விலை குறைத்து விற்கப்படுகிறது.
அவரைக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.45 ஆக விற்கப்படுகிறது. கத்தரிக்காய் கிலோ ரூ.12க்கு விற்கப்படுகிறது. இன்று அனைத்து கடைகளும் கோயம்பேட்டில் திறந்திருந்ததால் வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்தது.
Post a Comment