மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா

புதுடெல்லி, செப்.22-
டெல்லியில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான தி.மு.க., முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கூட்டணிக்கு தார் மீக உரிமை இல்லை. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மைனாரிட்டி ஆகிவிட்டது. இந்த அரசு மக்களுக்கு சுமையாகிவிட்டது. அது நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இந்த மக்கள் விரோத அரசிடமிருந்து நாட்டு மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாரதீய ஜனதாவின் எதிர்பார்ப்பு. மேற்கு வங்காளம் மற்றும் நாட்ட� � மக்களின் நலனையொட்டி, மூழ்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி கப்பலில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறி இருப்பது பாராட்டுக்குரியது. வெற்றி கண்டுள்ள நாடளாவிய முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் கர ுத்தொற்றுமை ஏற்படுத்திய பின்னர்தான், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அப்போதைய நிதி மந்திரியும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதன்படி நடந்துகொள்ளாமல் இப்போது முடிவு எடுத்திருப்பது, மக்களுக்கு செய்த துரோகம் ஆகும். மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வர� ��வதை தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவை தொடர்வதாக முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளாரே என கேட்கிறீர்கள். இதன்மூலம் மக்கள் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியின் இரட்டை வேடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி ஒருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டையும், (டீசல்) விலை உயர்வையும் எதிர்க்கிறது. மற்றொரு புறம் மத்திய அரசுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ள ை செய்வது போல ஆதரவு அளிக்கிறது.மத்திய அரசு தனது முடிவுகளை வாபஸ் பெறுமாறு சமாஜ்வாடி கட்சி நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு ஷா நவாஸ் உசேன் கூறினார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி மத்திய அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்துமா?என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷா நவாஸ் உசேன் நேரடியாக பதில் அளிக்க� ��மல், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற நிலையில், தற்போது நாங்கள் வளர்ச்சி பணிகளில்தான் குறியாக இருக்கிறோம் என பதில் அளித்தார்.
Post a Comment