ஒரு கல் ஒரு கண்ணாடி' ப டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியான முழுநீள நகைச்சுவைப் படம் 'கலகலப்பு'.
'உள்ளத்தை அள்ளித்தா', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'வின்னர்' போன்ற முழுநீள காமெடி படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
'கலகலப்பு' படத்தில் சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்தார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து � ��ந்தானத்தின் காமெடி இருப்பதால், இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது.
'ஜாலியாக வாங்க... ஜாலியாக போங்க' என்ற கலகலப்பாக வெளியான படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
இது குறித்து தனஞ்செயன் " கலகலப்பு படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கை 18ம் தேதி முதல் அதிகரிகப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
'கலகலப்பு' படத்தின் இரண்டாம பாகத்தினை அதே படக்குழுவினரை கொண்டு உருவாக்கலாமா என்று யோசித்து வருகிறோம். " என்று தெரிவித்து இருக்கிறார்.
Post a Comment