வசூல் இயக்குநர் என்று கோடம்பாக்கத்தால் பாராட்டப்படும் இயக்குநர் ஷங்கரே, எனது வலது கரம் மாதேஷ் தான் என்று ஒரு காலத்தில் இயக்குநர் மாதேஷை பாராட்டினார். அந்த அளவுக்கு விறுவிறுப்பான காட்சிகள் அமைப்பதில் திறமை வாய்ந்த மாதேஷ், இயக்கும் படம் தான் 'மிரட்டல்'
தலைப்பில் மட்டும் இன்றி படத்தில் இடம்பெறும் பல காட்சிகளை மிரட்டும் அளவுக்குதான் படமாக்கியிருக்கிறார். அதேபோல இதுவரை எந்த சினிமாவிலும் இடம்பெறாத லோக்கேஷன்களையும் இப்படத்திற்காக தேடி பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் லண்டன் பார்லிமென்ட். இங்கு இத� �வரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றதில்லையாம். அத்துடன் நடிகர் சிவாஜி வீட்டிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் மாதேஷ்.
அசல் படத்தில் சிவாஜி சார் வீட்டின் வெளிப்புறத்தை காட்டியிருப்பாங்க. நான் வீட்டிற்குள் எடுக்கணும்னு நினைச்சேன். பிரபு சாரிடம் தயங்கி தயங்கி கேட்டேன். அவர் எடுத்துக்கோங்க என்று கூறிவிட்டார். என்ற மாதேஷ், "இப்படத்திற்காக ஹீரோயினின் தேதி அதிக அளவில் தேவைப்பட்டது. அதனால் தான் புதுமுகத்தை தேடினேன். அப்போதுதான் ஷர்மிளா, புகைப்படத்தைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. இரண்டு பயிற்சி கொடுத்து அதை செஞ்சிட்டு வாம்மா என்று அனுப்பினேன். திரும்பி � �ரமாட்டாரு என்று தான் நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் கழித்து வந்து நான் சொன்னதை அப்படியே செய்தார். இந்த படத்திற்காக அவர் இரண்டு வருடங்கள் காத்திருந்தார்.
ஹீரோவும் அதேபோலதான். இமேஜ் இல்லாத ஒரு ஆளாக இருக்கனும் என்று நினைத்தேன். சட்டென்று என் மனதுக்குள் வினய் வந்தார். அவர் இதுவரை ரொமண்ட்டிக்கான ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரை அப்படியே மாற்றியிருக்கிறேன். அவருடைய தோற்றத்தையே முழுமையாக மாற ்றி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் அவர் அறிமுகமாகிறார்." என்று கூறினார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் சென்னை, பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது. இதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், டிரைலரும் உண்மையில் மிரட்டலாக தான் இருந்தது.
வினயின் ஆக்ஷன் ஓகே தான் என்றாலும், பிரவின் மணியின் அதிரடியான இசைக்கு ஷர்மிளாவின் ஆட்டம் தான் கொஞ்சம் சுமார்.
ஹீரோயினுக்கு நடிப்பு, தமிழ் போன்ற பயிற்சிகளை கொடுத்த மாதேஷ், அப்படியே நடன பயி ற்சியையும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.
Post a Comment