News Update :
Home » » சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி

சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி

Penulis : karthik on Thursday 17 May 2012 | 08:16


ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே பொறுப்பான � �ட்டத்தை வெளிப்படுத்தி, 16.3 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கேப்டன் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில� �� பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்கம் முதலே சொதப்பலாக பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான மைக்கேல் ஹஸ்ஸி 7 ரன்களில் பிரவீண் குமார் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் 17 ரன்களில் எடுத்த ரெய்னா அவுட்டானார். கேப்டன் டோணி 6 ரன்களில் ஏமா� �்றினார்.

சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 13 ரன்கள் எடுத்து நிதின் சைனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு அல்பி மார்கல், பிராவோ ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்த� ��ர். ஆனால் 14 ரன்கள் எடுத்த மார்கல், பிரவீண் குமாரிடம் கேட்சாகி வெளியேறினார். 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்கிய பிராவோ, ஹாரீஸ் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிரவீண் குமார், அசார் மக� �ூது, அவானா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனா� �் மன்தீப் சிங் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை எடுத்த நிலையில், மார்க்கலின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த நிதின் சைனி 1 ரன் எடுத்து பிராவோ பந்தில் அவுட்டானார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் ஹஸ்ஸ் 9 ரன்கள் எடுத்து பிராவோவின் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிய, துவக்க வீரரும் கேப்டனுமான கில்கிறிஸ்ட் மறுபுறம் நின்று பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். அவருக்கு சித்தார்த் ஒத்துழைப்பு கொடுத்து ஆட ினார். 14வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை சேர்த்த கில்கிறிஸ்ட் அரைசதம் கடந்து, அதிரடியை தொடர்ந்தார். 15வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த சித்தார்த், டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கேப்டன் கில் கிறிஸ்ட் 46 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அசார் மகமூது உதவியுடன் கிங்ஸ் லெவன� �� பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger