சற்குணம் இயக்கத்தில் விமல்-இனிய நடித்து கடந்த ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகைசூடவா வெற்றிப்படத்தினை தொடர்ந்து முருகானந்தம் வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பாக புதிய படம் ஒன்றை மிகபிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
குட்டிப்புலி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சுப்ரமணியபுரம், நாடோடிகள், ஈசன் மற்றும் போராளி உள்ளிட்ட படங்களில் நடித்த இயக்குனர்-நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக பிரபல முன்னணி நடிகை நடிக்கிறார். மற்ற நடிக-நடிகையினரின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தமிழச்சி அசோகன், கஜேந்திரன் மற்றும் பூபதிபாண்டியன் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணி யாற்றிய முத்தையா இயக்குகிறார்.
பெண்மையின் வலிமையையும், தியாகத்தையும், தூய்மையையும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கி நடைபெறுகிறது
ஸ்ரீராம் உதவியாளரும் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, மௌனகுரு ஆகிய படங்களில் பணியாற்றிய மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய வாகைசூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனா ஜிப்ரான் இசையமைக்க பாடல்கள் "கவிப்பேரரசு " வைரமுத்து எழுதுகிறார்./p>
நடனம்: தினேஷ்
சண்டைப்பயிற்சி: திலீப் சுப்புராயன்
தயாரிப்பு மேற்ப்பார்வை: மூர்த்தி
மக்கள்: நிகில்
தயாரிப்பு: முருகானந்தம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: முத்தையா
http://tamil70.blogspot.com
Post a Comment