நெல்லையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை முன்னரே துவக்கியிருக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதம் துவக்காத காரணத்தினால் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சசிகலா அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டது, மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டது அனைத்தும் நாடகம். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை நாங்கள் தான் வெளிக்கொண்டு வந்தோம். இதனால் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டது. ஆட்சி மாற்றத்தை தற்போதைய அரசு சரியாக பயன்படுத்தாமல் விலைவாசி உயர்வு, கட்டண உயர்வை மக்களிடம் திணிக்கிறது.
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் தயாநிதி விரைவில் சிறை செல்வார் எனவும் சாமி தெரிவித்துள்ளார்.
Post a Comment