சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியாக இருந்த சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிற� �வனத்தை நிறுவி படங்களை தயாரித்தும், பிறர் தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விநியோகம் செய்தும் வருகிறது.
தமிழ் தொலைகாட்சிகளில் சன் சேனலுக்கு போட்டியாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சி தனது சேனலில் சில படங்களுக்கு விளம்பரம் செய்தாலும் விநியோகம் செய்வதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது.
சில நாட்களுக்கு முன் ஆஸ்கர் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தை ஜெயா சேனல் விநியோகம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் பிறகு அது பொய்யாகி ஆஸ்கார் ஃபிலிம்ஸும், ஐங்கரன் இண்டர்நேஷனலும் அந்த படத்தை விநியோகம் செய்தன.
தற்போது ஜெயா தொலைக்காட்சி இனி வரவிருக்கும் படங்களை விநியோகம் செய்வதில் முனைப்புடன் இறங்கப்போவதாகத் தெரிகிறது. ஜெயா தொலைக்காட்சியின் பார்வை வளையத்திற்குள் இருப்பது கமலஹாஸனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகிக்கொண்டிருக்கும் படமான விஸ்வரூபம் மற்றும் ரஜினியின் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் கோச்சடையான் ஆகிய படங்கள் தான் என்கின்றனர்.
முக்கிய நடிகர்களின் படங்களையும், பிரபல தயாரிப்பாளர்களின் படங்களையும் தன் வசம் இழுப்பதற்கு ஜெயா தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாம்.
Post a Comment