கூடங்குளத்தில் அணு உற்பத்தி செய்ய அப்பகுதி மக்கள் உதயகுமார் தலைமையில் 8 மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து 8 மாத காலமாக அணு உலை பணிகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஆயத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்கான தடையில்லா சான்று வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 40 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும். அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் கூடங்குளத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் சான்றளிப்பு ஒரு வாரத்தில் கிடைக்கும். அதன்பிறகு 20 ந ாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து, மின் உற்பத்திக்காக அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படும். பின் அந்த அணுஉலையில் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். முதல் அணுஉலையில் உற்பத்தி தொடங்கிய இரண்டு மாதத்தில் இரண்டாவது அணுஉலையில் உற்பத்தி தொடங்கும்.
இதற்காக இந்திய மற்றும் ரஷிய த ொழில்நுட்ப பொறியாளர்கள் 2000 பேர் இரவு பகலாக பணிபுரிகிறார்கள் என கூறினார்.
Post a Comment