2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) சிபாரிசு செய்து உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான்.
ஆனால், டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ர ம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தற்போது உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டண விகிதங்கள் குறைவாக உள்ளன. டிராய் அமைப்பின் இந்த பரிந்துரை காரணமாக இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் அதிக அளவில் உயரும்' என்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.
வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
Post a Comment