2 ஜிஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு சர்ச்சையில் தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த ஆ.ராசா மற்றும் அந்த துறை அதிகாரிகள் என பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட� �டனர். அனைவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஆ.ராசா கடந்த 2010 நவம்பரில் கைது செய்யப்பட்டார். ஓராண்டை கடந்து 14 மாதங்களாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார். இவருடன் கைது செய்யப்பட்டவர்களில் தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா தவிர மற்றவர்கள் அனைவரு� ��் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெகுராவின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது. ஆனால் ஆ.ராசா தரப்பில் இதுவரை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு ஆ.ராசா அழைத்து வரப்பட்டிருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான் ஜாமீனில் விடுதலையாக விரு� �்பவில்லை. குற்ற மற்றவனாக வெளியே வரவே விரும்புகிறேன். 2ஜி வழக்கில் தற்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனது முழு கவனத்தையும் அதன் மீதுதான் செலுத்தி வருகிறேன். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதற்கு மேல் விரிவாக விவரிக்க விரும்ப வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆ.ராசாவின் வக்கீல் பாபன்ஜீத் சிங் கூறுகையில் பெகுரா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர் ஜாமீனில் விடப்பட்டால் ராசாவுக்கும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம் என்றார்.

Post a Comment