நடிகர் பிரபுதேவா கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தன் வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டா� �ினார். மிட்-நைட் பார்ட்டியாக அரம்பித்து காலை வரை நீடித்த அந்த பார்ட்டியில த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி! என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்திலும் அந்த
பார்ட்டியை பற்றிய தகவல் வெளிவந்தது. அதன் பின் பிரபுதே வா 'துன்பம் வரும் வேலையில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என பேசினார்.
பார்ட்டியில் த்ரிஷாவுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவினால் பிரபுதேவா த்ரிஷாவுடன் இணைத்து கதை கதையாக பேசினார்கள்.
இதை பற்றி பேசிய த்ரிஷா "தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். இடையில் எ� �்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம்.நட்பு காரணமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதனால் அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றேன்.
அதற்குள் ஏகப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் நண்பர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது 'சமரன்' படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன்.
எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கக் கூட என்னிடம் நேரம் இல்லை. " என்று கூறினார்.
இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.
Post a Comment