ரஜினி, கமல் படங்களுக� �குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைத்து அமர்க ்களப்படுத்துகின்றனர்.
அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.
சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம ் பார்த்தபோது சிறப்பாக இருந்தது.
நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக் கிறேன். கவுதம்மேனன் இயக்குகிறார்.
Post a Comment