பிரிட்டனின் பிளின்ட் என்ற நகரத்தில் வசிப்பவர் கேட்டி டெல். 27 வயதான இந்த பெண், விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமாக கருதப்படும் தண்ணீர், இவருக்கு மட்டும் பரம விரோதி.
ஒரு சொட்டு தண்ணீர், இவரது உடலில் பட்டால் போதும், தண்ணீர் பட்ட இடத்தில், தோல் எரிச்சல் ஏற்படும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்தில் தீயால் சுட்டது போன்ற கொப்புளங்கள் ஏற்படும். தாங்க முடியாத வலியும் ஏற்படும். இதுவே, அதிகமான தண்ணீர், அவர் மீது பட்டால், உயிரே போய் விடும். இப்படி ஒரு விசித்திரமான நோய், மிகவும் அரிதாகவே ஏற்படும். தற்போதைய சூழலில், இந்த நோயால், உலகில், 35 பே� ��் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் கேட்டி டெல்லும் ஒருவர். தனக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலையை நினைத்து, கண்ணீர் விட கூட, இவரால் முடியாது. கண்ணீர் வடிந்தாலும், தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டு விடுமே! இதனால், வீட்டை விட்டு வெளியே வராமல், ஒரு கைதி போல், வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். தான் பார்த்து வந்த, நடன ஆசிரியை வேலையையும் விட்டு விட்டார்.
கேட்டி டெல் கூறுகையில், "எனக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூர வியாதி, உலகில் வேறு யா� �ுக்கும் வரக் கூடாது. எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப் போகிறேன் என தெரியவில்லை. அதற்குள், என் வியாதிக்கு மருந்து கண்டுபிடித்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும் இருக்கிறது…' என வேதனையுடன் க ூறுகிறார்.
Post a Comment