இதய திருடன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா , காசேதான் கடவுளடா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். காம்னா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் திருப்பதி ஏழுமலையான் என்னுடைய பாய்பிரண்ட் என்று சொல்லிவிட்டு போனார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாய்பிரண்ட் என்று கடவுளை சொல்வதா என போனிலும், கடிதம் மூலமாகவும் காம்னாவுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து காம்னா நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டர். நிருபர்க� ��ுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்று சொன்னதற்காக இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏழுமலையான் எனக்கு தந்தையாகவும், நண்பராகவும் இருக்கிறார். அந்த அர்த்தத்தில் தான் அப்படி பேசினேன். ஆங்கிலத்தில் பாய்பிரண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் சர்ச்சையாகிவிட்டது.
ஏழுமலையான் எனக்கு இஷ்ட தெய்வம். அவருக்கு பிறகுதான் எனக்கு எல்லாமே. பாய்பிரண்ட் என்று நான் சொன்ன வார்த்தை பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன். அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு காம்னா கூறினார்.
Post a Comment