ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கெப்டர் மற்றும் விமானம் ஒன்றின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே 'லயன் எயர்' பயணிகள் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஏவுகணையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 'அன்டனோ' விமானத் தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன. இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன
Post a Comment