நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது, மோட்டார் சைக்கிளொன்று தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இளைஞர் ஒருவர் தீயில் கருகி மரணமடைந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தீயில் மரணமடைந்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment