இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் காதல் ஜோடி யாரென்று கேட்டால் அது ஆர்யா – நயன்தாரா ஜோடிதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.'வேட்டை' சமயத்தில் மலையாள நடிகை அமலா பாலில் மட்டுமே டீ, காபி போட்டுக்குடித்துக்கொண்டிருந்த ஆர்யா, இப்போது அவரை சுத்தமாக கைகழுவி விட்டுவிட்டு, கேட்பாரற்று கிடந்த நயன்தாராவை வேட்டை'யாடிவிட்டாராம்.
சில தினங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது பழைய வீடு ஒன்றை புதுப்பித்து, புதுமனை புகு விழா நடத்திய ஆர்யா, வருவாரோ வரமாட்டாரோ என்ற சந்தேகத்தில் நயன் தாராவையும் அழைத்திருந்தாராம்.
மிகப்பிரமாதமான அலங்காரத்தோடு விழாவுக்கு வந்த நயன், அனைத்து வி.ஐ.பி. களும் போனபிறகும் கூட , ஆர்யாவுடனே முழு நாளைக் கழித்து ஆறுதல் தேடிக்கொண்டாராம்.
அன்று முதல் அவர்கள் உறவில் நெருக்கம் ஏற்பட்டு, காதலில் கசிந்துருகி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் வயிறெரிகின்றன.
நயன் தாராவை அழைத்து விட்டு தன்னை கண்டு கொள்ளாமல் போன ஆர்யா மீது பெரும் ஆத்திரமடைந்த அமலா பால், மலையாள மாந்த்ரீகர்கள் சிலரை அழைத்து ஆர்யாவின் பேரில் சூன்யம் வைக்கலாமா என்று சோதித்து வருவதாக தகவல்.
Post a Comment