இலங்கை அரசு மீதான போர்குற்ற விசாரணை நடத்தவும், சுதந்திர பன்னாட்டு குழு அமைக்கவும்,போர்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவும் வலியுறுத்தி கோரிக்கை பேரணி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்களும், நடிகர் திரு. மணிவண்ணன் அவர்களும் தலைமை தாங்குகிறார்கள்.
இப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு. சீமான் கூறியபோது, ஈழ மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு இந்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. இது நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசைப்பொறுத்தவரை அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க ஆரம்பித்துள்ளார்கள். இது நமக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்திய மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டால், கொடுங்கோலன் இராஜபக்சே அரசை நாம் முற்றிலுமாக நிராகரிக்கலாம், நாம் இங்கும் எழுப்பும் உரத்த ஒலிகள் கடல் தாண்டி இருக்கும் இராசபக்சே அரசின் காதுகளில் ஊசியென பாயவேண்டும் என்றார்.
எழும்பூர் இராசரத்தினம் மைதானத்தில், அலைகடலென திரண்ட மாபெரும் மக்கள் கூட்டத்தில், நாகை, திண்டுக்கல், காஞ்சிபுரம்,திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் இருந்தும், மற்றும் மகளிர் பாசறையை சேர்ந்தவர்களும் என வயது வேறுபாடின்றி மக்கள் திரண்டு இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இன்னும் ஒரு முறை இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரிவிப்போம் என்ற சபதத்தோடு இப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பலத்த காவல் துறையினரின் பாதுகாப்போடு நடத்தப்படும் இப்பேரணி மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழர்கள் நாம் ஓன்று திரண்டால் இத்தரணியை கூட வென்றிடலாம்.
Post a Comment