உபியில் இப்போது நடந்துள்ள சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைப் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே நடத்தியுள்ள இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 195 முதல் 210 வரை சீட்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
தற்போதைய முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 88 முதல் 98 இடங்கள் கிடைக்கும். இது அக்கட்சிக்கு இப்போதுள்ள இடங்களை விட 100 சீட்கள் குறைவு.
பாஜகவுக்கு 50 முதல் 56 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு நான்காவது இடம்தான்
ராகுல் காந்தியே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடம்தான் கிடைத்துள்ளது. அக்கட்சி 38 முதல் 42 தொகுதிகளை வென்றாலே பெரிய விஷயம் என இந்தத் தேர்தல் முடிவு கூறுகிறது. இத்தனைக்கும் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகள் காங்கிரஸ் வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Post a Comment