இந்த வாரம் கோடம்பாக்கத்தில் அரவான், கொண்டான் கொடுத்தான் மற்றும் யார் என மூன்று படங்கள் வெளியாகின்றன.
இவற்றில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகத் திகழ்வது வசந்தபாலனின் அரவான். வரலாற்றுப் படம்.
வீ சேகரின் உதவி இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் கொண்டான் கொடுத்தான். வீ சேகர் பாணியிலான கிராமத்துக் குடும்பக் கதை.
மூன்றாவதாக வரும் 'யார்' ஒரு டப்பிங் த்ரில்லர் படம்.
அரவானுக்கு எந்த வகையிலும் போட்டியைத் தராத படங்கள் மற்ற இரண்டும். ஆனால் அரவான் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை, பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுதான். மற்ற வகுப்புகளுக்கும் கூட இன்னும் சில தினங்களில் பரீட்சே தொடங்கிவிடும். எனவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டுள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம், வரும் கோடையில் பெரிய படங்கள் வரிசையாக களமிறங்கக் காத்துள்ளன. அந்தப் போட்டியில் சிக்காமல், தனித்து நிற்க இந்த மார்ச் முதல்வார ரிலீஸ் உதவும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் கருதுகிறார்கள்.
பரீட்சையில், அரவான் பாஸாகிவிடுவானா... பார்க்கலாம்!
Post a Comment