கதைப்படி கொடைக்கானலில் பாட்டியுடன் தங்கி கல்லூரியில் படிக்கும் பணக்கார வீட்டு கதாநாயகிக்கு, அங்கு குடிகார தந்தையுடன் செருப்பு தைத்து ஜீவனம் நடத்தும் கதாநாயகர் மீது காதல். முதலில் இந்த காதலை ஏற்க மறுக்கும் ஹீரோ, கதாநாயகியின் காதல் தீவிரத்தால்
காதலில் இறங்குகிறார். விஷயம் நாயகியின் அப்பாவிற்கு தெரிந்ததும் விஸ்வரூபம் எடுக்கிறது. காதலியை அவர் பார்க்க விரும்பிய தாஜ்மஹாலுக்கு சைக்கிளிலேயே அழைத்து போகும் நாயகன், நாயகியின் அப்பா அனுப்பிய அடியாட்களை தாண்டி நாயகியுடன் இணைந்தாரா...? இல்லை இறுந்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்!
கதை நாயகனாக புதுமுகம் வினோத் வெங்கடேஷ், கதாநாயகி திவ்யா, சஞ்சனா சிங், மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், சத்யப்ரியா, தீப்பெட்டி கணேசன், சுமன் ஷெட்டி, ராம்பாபு, புலியாண்டி, பரமு, உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் மன்சூரும், நாயகன், நாயகியும் நச் என்று நடித்துள்ளனர். பலே! பலே!!
எஸ்.எஸ்.குமரனின் இசையில், முருகன் மந்திரத்தின் பாடல் வரிகளும், ரவி சீனிவாஸின் ஒளிப்பதிவும், வியாசனின் எழுத்து-இயக்கத்தில் காதல் பாதையை கலக்கல் பாதையாக்க முயன்று இருக்கின்றன.
"காதல் பாதை" - "கமர்ஷியல் பாதை"! "கலெக்ஷன் பாதையா...?"!!
Post a Comment