அமெரிக்காவில் நுரையீரல் கட்டிக்காக சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங் தாம் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளமான டுவிட்டரிப் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் தலைமுடி இல்லாத தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் டுவிட்டரில் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில்" கடைசியாக முடிதான் போச்சு! நான் நல்லா இருக்கேன்! யுவ்வலுவாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ்சிங் தற்போது பாஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், தாம் முன்னைவிட வலுவாக திரும்பி களத்துக்கு வருவேன். ஏனெனில் என்னுடைய நாடே எனக்காக பிரார்த்திக்கிறது! என்னுடைய தனிமையை மதித்து ஆதரித்து வரும் ஊடகங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
30 வயதாகும் யுவராஜ்சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 1775 ரன்களைக் குவித்துள்ளார்.
274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் மிக அபாரமாக ஆடியவர் யுவராஜ்சிங்.
யுவராஜுக்கு முதலில் நுரையீரல் புற்றுநோய் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரது மருத்துவர்கள் நுரையீரலில் கட்டிதான் அது புற்றுநோய் அல்ல என விளக்கம் அளித்திருந்தனர்.
Post a Comment