நடிகை அனன்யாவுக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அனன்யா நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக "சீடன்" மற்றும் "எங்கேயும் எப்போதும்" படங்களிலும் நடித்துள்ளார்.
ஆஞ்சநேயன் அனன்யாவை விட வயது அதிகமானவர். ஆனாலும் கேரளாவில் பெரும் பணக்காரராக உள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இதற்கிடையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2008-ல் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறப்பட்டது.
முதல் திருமணத்தை மறைத்து மோசடியாக அனன்னாவை 2-வது திருமணம் செய்ய முயற்சித்ததாக பெற்றோர் ஆவேசமடைந்துள்ளனர். ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாபவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் ஆஞ்சநேயனுக்கு 2-வது மனைவியாக அனன்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிச்சயதார்த்தத்துக்கு முன்பே ஏற்கனவே திருமணம் ஆனதையும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் ஆஞ்சநேயன் தெரிவித்து விட்டாராம். அனன்யா பெற்றோரிடம் மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டாராம்.
இதனால் தற்போது எழுந்துள்ள சர்ச்சையை அனன்யா பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால் பெற்றோர் திருமணத்துக்கு தடை போட்டுள்ளனர். அனன்யா வெளியேறி விடாமல் இருக்க வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment