விரைவில் இருவீட்டினரும் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல், ஹரிதாஸ் போன்ற தமிழ் படங்களிலும் ஜோஸட்டன்டே ஹீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினேகா விரும்பினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம். தடைபோடமாட்டேன் என்று பிரசன்னா கூறினார். சினேகாவிடம் இது குறித்து கேட்டபோது, திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் காதலர் தினத்தையொட்டி சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். கைகோர்த்தும் நெருக்கமாக நின்றும் விதம் விதமாக போட்டோ எடுத்தார்கள். வடக்கில் இருந்து வெளியா கும் பத்திரிகையொன்று இதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தது. காதலர் தினத்தையொட்டி இப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
Post a Comment