ஹொண்டுராஸ் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் ஒன்றில் இன்று (15) ஏற்பட்ட தீ விபத்தில் 272 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹொண்டூராஸ்சின் தலைநகரில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த சிறைக்கைதிகள் உடல் கருகி அல்லது புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அந்த நாட்டுத் தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.சிலர் கூரைகளை உடைத்தும், கட்டடத்தில் இருந்து குதித்தும் உயிர் தப்பியுள்ளதாக அவர்களது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment