பிரபல மலையாள நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் 'நூற்றி எண்பது', 'வெப்பம்' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'தற்சமயம் ஒரு பெண் குட்டி', 'உஸ்தட் ஓட்டல்' என இரு மலையாள படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இவற்றின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இவ்விரு படங்களையும் திரையிட மாட்டோம் என கேரள தியேட்டர் அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கேரள தயாரிப்பாளர் சங்கம் இரு மாதங்களுக்கு முன் நித்யா மேனனுக்கு தடை விதித்தது. தற்சமயம் பெண்குட்டி படத்தில் நித்யா மேனன் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தனது புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வது குறித்து அவரை சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அந்த தயாரிப்பாளரை சந்திக்க நித்யா மேனன் மறுந்து விட்டார்.
மூத்த தயாரிப்பாளரை அவமதித்து விட்டதாக அவருக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இந்த நிலையில் அவரது இரு படங்களும் ரிலீசாக போகும் நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவை ஏற்று நித்யா மேனனின் படங்களை திரையிட மறுத்துள்ளனர்.
நடிகர் சங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
Post a Comment